உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலைத்திருவிழாவில் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழாவில் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு

பல்லடம்; கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் நடந்தது.பல்லடம் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில், வட்டாரத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்லடம் அருகே ராயர்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.பல்லடம் வட்டார கல்வி அலுவலர் சசிகலா தலைமை வகித்தார். சாமிகவுண்டம்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற, 589 மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலைத்திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை