மேலும் செய்திகள்
இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்
10-May-2025
போலீசாக நடித்து வழிப்பறி 'கில்லாடி' வாலிபர் கைது
01-Jun-2025
தீக்கு இரையான தம்பதி சென்னையில் சோகம்
11-May-2025
ஒசூரில் பெய்த கனமழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு
19-May-2025
திருப்பூர்: குடிநீர் குழாய் உடைந்து, ஆறு போல் ரோட்டில் தண்ணீர் ஓடியதால், காங்கயம் ரோடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்பூர் காங்கயம் ரோடு பகுதிகளில் உள்ள வார்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, நான்காவது குடிநீர் திட்டத்தில் பகிர்மான குழாய் பதிக்கப்பட்டது. மெயின்ரோடு வழியாக, தண்ணீர் செல்லும் மெயின் குழாயும் பதிக்கப்பட்டது.குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை முறையில் தண்ணீர் சப்ளை செய்யும் பணி, வார்டு வாரியாக நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டன், டி.எஸ்.கே., மருத்துவமனை பகுதியில், திடீரென குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் ஓடியது. ரோடு முழுவதும் ஆறு போல் தண்ணீர் ஓடியதால், டூ வீலரில் பயணித்தவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மூன்று மணி நேரம், காங்கயம் ரோடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10-May-2025
01-Jun-2025
11-May-2025
19-May-2025