மேலும் செய்திகள்
முதல்வரின் தனிச்செயலர் பிறந்த நாள் விழா
22-May-2025
அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் 79. தனது மகன் தனசேகருடன் வசித்து வருகிறார். மோகன சுந்தரம், சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், தனது மகனிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை மாயமானதால், திருமுருகன்பூண்டி போலீசில் தனசேகர் புகார் அளித்தார். இதற்கிடையில், அவிநாசி அருகே அம்மாபாளையம் ராசாத்தம்மன் கோவில் எதிரே உள்ள குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரித்தனர். அந்த நபர், மோகனசுந்தரம் என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 'அறுவை சிகிச்சைக்கு பயந்து, தற்கொலை முடிவை அவர் எடுத்திருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
22-May-2025