உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரச்னைகளுக்கு தீர்வு தற்கொலை கிடையாது

பிரச்னைகளுக்கு தீர்வு தற்கொலை கிடையாது

திருப்பூர்: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டாக்டர் கலைச்செல்வன் பேசுகையில், ''எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. பிரச்னைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். சமூக பிரச்னைகள், பாலின வேறுபாடு, மன உளைச்சல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகள் தான் தற்கொலைக்கான காரணி களாக உள்ளன. தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரேவதி, பூபதி, ஆகாஷ், சந்தியா, பிரியங்கா, பிரவீன் ஆகியோர் தலைமையிலான மாணவ, மாணவியர், மஞ்சள் வண்ண ரிப்பன் அணிந்தும், துண்டு பிரசுரம் வினியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை