உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கல்லுாரி மாணவியர் ஊர்வலம்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கல்லுாரி மாணவியர் ஊர்வலம்

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரியில், உலக தற்கொலை தடுப்பு தினம், கொண்டாடப்பட்டது.மருத்துவக்கல்லுாரி, செவிலியர் பயிற்சி கல்லுாரி மற்றும் மருந்தியல் கல்லுாரி மாணவ, மாணவியர், 'தற்கொலை வேண்டாமே' என்ற பிரசாரத்தை முன்னெடுத்து, விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மனோன்மணி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், கல்லுாரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன், உதவி இருப்பிட மருத்துவ அலுவலர்கள் லக்மன், ஹரிஹரகுகன் உட்பட பிற துறை தலைவர்கள் பங்கேற்றனர். மனநலத்துறை மருத்துவர் விஸ்வநாதன், 'தற்கொலைக்கான காரணிகள் மற்றும் தீர்வு' குறித்து பேசினார். பின், தற்கொலை தடுக்கும் முறைகள் மற்றும் தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற தலைப்புகளில், ஓவியப் போட்டி, போஸ்டர், ரீல்ஸ் போட்டி, நாடகப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ