மேலும் செய்திகள்
கோடை மழையில் உழவு செய்ய வேளாண் அதிகாரி ஆலோசனை
06-May-2025
திருப்பூர்; மாசி முதல், வைகாசி வரை, நான்கு மாதங்கள் நிலம் உழவின்றி தரிசாக இருக்கும்.இதுதான் ஆழமாக கோடை உழவு செய்ய தக்க தருணம். பயிரில்லா காலம்தான்... வயலை உழுது புழுதியாக மாற்ற வேண்டும்.உழவின் எண்ணிக்கையும், ஆழமும் களையின் தீவிரத்தை பொறுத்தது. 15 - 20 நாட்கள் இடைவெளியில், பருவமழை வருவதற்கு முன், இரண்டு முறை கோடை உழவு செய்ய வேண்டும்.வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கட்டிகள் உடைந்து, மண் அரிப்பு தடுக்கப்பட்டு, சத்துக்கள் இழப்பும் குறைகிறது. மழை காலத்தில் மழைநீர் மண்ணுக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டம்உயர்கிறது.
06-May-2025