உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை கொட்டும் விவகாரம் பொதுமக்களுக்கு சம்மன் ;போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

 குப்பை கொட்டும் விவகாரம் பொதுமக்களுக்கு சம்மன் ;போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையை பாறைக்குழி உள்ளிட்ட இடங்களில் கொட்டினர்.செல்லும் இடத்தில் எல்லாம் மாநகராட்சிக்கு எதிராக மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து போராடி வருகின்றனர். அவ்வகையில், முதலிபாளையம், இடுவாய் போன்ற இடங்களில் மக்கள் போராட்டத்துடன் சேர்ந்து, சட்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, ஐகோரட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் கோவைக்கு வந்த முதல்வரை சந்தித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய போராட்டக்காரர்கள் முடிவு செய்திருந்த நிலையில், திடீரென குப்பைக்கு எதிராக போராடிய மக்களுக்கு நல்லுார் போலீஸ் தரப்பில் சம்மன் வழங்கப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதில், 'முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த தடை பெற்றது தொடர்பாக, தாங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மற்றும் தடை உத்தரவு நகல், வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய உள்ளதால், ஆவணங்களுடன் விசாரணைக்கு வர வேண்டும்,' என்று சிலரை ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து வந்தனர். ஸ்டேஷன் முற்றுகை இந்நிலையில், சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து குப்பைக்கு எதிராக போராடி வரும் மக்கள் நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது, எஸ்.எஸ்.ஐ. மகாலிங்கம் என்பவர், மக்களுக்கு முறையாக பதில் அளிக்காமல் மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். அதன்பின், ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்களிடம் நல்லுார் உதவி கமிஷனர் தையல்நாயகி பேச்சு நடத்தினர். 'சம்மன் கொடுத்து விசாரணைக்கு மட்டும் தான் அழைக்கப்பட்டது. எழுதி கொடுத்து விட்டு செல்லலாம்,' என்று கூறினார். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர். முதல்வர் வருகையின் போது, போராட்டக்காரர்கள் ஏதாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய கூடாது என்ற நோக்கில், திசை திருப்பும் வகையில் நடந்து கொண்ட போலீசாரின் நடவடிக்கையை பொதுமக்கள் கண்டித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை