உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சூரியகாந்தி  விதைகள்  ரூ.15.42 லட்சம் ஏலம்

சூரியகாந்தி  விதைகள்  ரூ.15.42 லட்சம் ஏலம்

வெள்ளகோவில்; வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. இதில் வாகரை, காவலப்பட்டி, விராலிபட்டி, சுள்ளெரும்பு, கொத்தயம், வள்ளிபட்டி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் சூரிய காந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 26,117 கிலோ சூரியகாந்தி விதைகள் கொண்டுவரப்பட்டன. வெள்ளகோவில், காங்கயம், முத்துார், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு கிலோ சூரியகாந்தி விதை, 61.97 ரூபாய், குறைந்தபட்சம், 52.29 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 15.42 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை