உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்! கந்தசஷ்டி கவசம் ஒலிக்க பக்தி மணம் கமழும் கோவில்கள்

இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்! கந்தசஷ்டி கவசம் ஒலிக்க பக்தி மணம் கமழும் கோவில்கள்

திருப்பூர்; கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம், முருகன் கோவில்களில் இன்று நடக்கிறது.கந்தசஷ்டி விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து, விரதத்தை துவக்கினர். கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, காங்கயம் சிவன்மலை சுப்ர மணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வர் கோவிலுக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அன்றாடம் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சக்தியிடம் வேல் வாங்குதல், சப்பரத்தில் எழுந்தருளல், பல வடிவங்கள் எடுத்து, சூரனை வதம் செய்யும் நிகழ்வு இன்று மாலை, 5:00 மணிக்கு மேல் அனைத்து முருகன் கோவில்களில் நடக்கிறது. நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.அதேபோல், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று சூரசம்ஹாரமும், நாளை காலை திருக்கல்யாண உற்சவம் ஆகியன கோலாகலமாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Admission Incharge Sir
நவ 07, 2024 10:29

அருள்மிகு சுப்பிரமணியர் ஸ்வாமி திருக்கோயில், சிவன்மலையும் காங்கேயம் திருப்பூர் மாவட்டத்தில் தான் உள்ளது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இங்குள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசத்தன்று தேர்த்திருவிழா மிகமிக விமரிசையாக நடைபெறும். அனைவருக்கும் கந்தர் சஷ்டி பெருவிழா நல்வாழ்த்துக்கள். முருகா சரணம். முருகா சரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை