டேபிள் டென்னிஸ் போட்டி: ஸ்மார்ட் மாடர்ன் அசத்தல்
திருப்பூர் : திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளி (சி.பி.எஸ்.இ.,) டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்தியது. இதில், 12 வயதிற்குட்பட்ட பெண்கள் (ஒற்றையர்) பிரிவிலும் மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிலும் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. பள்ளி துணை முதல்வர் பிரேமலதா, சான்றிதழ், பரிசு வழங்கி வாழ்த்தினார்.