உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாட்கோ தொழிற்பேட்டை சீரமைப்பதாக உறுதி

தாட்கோ தொழிற்பேட்டை சீரமைப்பதாக உறுதி

திருப்பூர் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆடை உற்பத்தி, செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கம், உணவகம், தையல், கோழி வளர்ப்பு உட்பட பல்வேறு வகையான தொழில் துவங்குவதற்காக, தாட்கோ திட்டத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், புதிய தொழில் முனைவோரை உருவாக்குவது குறித்து ஆலோசிக்க, 'தாட்கோ' தலைவர் மதிவாணன் திருப்பூருக்கு வந்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்த அவர், முதலிபாளையத்தில் உள்ள தாட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில், ஆய்வு நடத்தினார்.தாட்கோவில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் இயக்கத்தை பார்வையிட்ட மதிவாணன், 'திருப்பூரில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தாட்கோ தொழிற்பேட்டை கட்டுமானங்கள், மறுசீரமைத்து தொழில்முனைனோர் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 2023 - 24 நிதியாண்டில், 468 பயனாளிகளுக்கு 11.10 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி