டீ பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
அவிநாசி; அவிநாசி, பழங்கரையிலுள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தி ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி சார்பில், 31ம் பள்ளி ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக சி.என்.எஸ். மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ரமேஷ் சுப்ரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் சந்திரன், இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன், மெட்ரிக் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு அனைத்து வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தனர். விழாவின் முத்தாய்ப்பாக, இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், கலாசாரங்கள் இருந்தாலும் நாம் இந்தியர்களாக ஒன்று படுகிறோம் என உணர்த்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.