உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் தினவிழா விருது வழங்கல்

ஆசிரியர் தினவிழா விருது வழங்கல்

திருப்பூர்; தமிழ்நாடு தமிழ்ச்சங்கம், திருப்பூர் மக்கள் மாமன்றம், கொடுவாய் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். சண்முகசுந்தரம் வரவேற்றார். சத்துருக்கன், மோகன்ராம் முன்னிலை வகித்தனர். தன்னம்பிக்கை பேச்சாளர் மனோகர், டாக்டர் முத்துசாமி, மெட்ரோ வீட்டுவசதி சங்க தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு தமிழ்ச்சங்க தலைவர் தங்கவேல் தலைமையில், மனித உயர்வுக்கு தேவை கல்வியா? செல்வமா? என்ற பட்டிமன்றம் நடந்தது. கல்வியே என்ற அணியில், ஆசிரியர்கள்கலாவதி, நாவுக்கரசு, ஜானகியும், செல்வமே என்ற அணியில், ஆசிரியர்கள் சந்திரசேகர், கிருஷ்ணவேணி, ராஜேஷ் ஆகியோர் பேசினர். விழாவில், ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆசிரியர் சிவானந்தம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ