உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ் வார விழா வென்றோருக்கு சான்று

தமிழ் வார விழா வென்றோருக்கு சான்று

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வார விழா மற்றும் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். பாரதி தாசன் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழா போட்டிகளான, கையெழுத்து, வினாடி - வினா, பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றிபெற்ற 33 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடந்த கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 12 பேருக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாமிடத்துக்கு, 7 ஆயிரம்; மூன்றாமிடத்துக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை