உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  50 சதவீத உற்பத்தி குறைப்பு; ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு

 50 சதவீத உற்பத்தி குறைப்பு; ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு

அவிநாசி: விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் விசைத்தறி துணிகள், 50 சதவீதம் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளனர். அவிநாசி ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், தொழில் நிலை குறித்து அவசர ஆலோசனை கூட்டம், சேவூர் ரோட்டில் நேற்று நடந்தது. அதில், நவ. மாதத்துக்கு பின், கழிவு பஞ்சு விலை உயர்வால் நுால் விலையும் உயர்ந்துள்ளது. அதேநேரம், ஆப்பிரிக்க சந்தைகளில் சீன துணி இறக்குமதி காரணமாக இந்திய துணிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் மற்றும் தேக்க நிலை காரணமாகவும் உற்பத்தியை, 50 சதவீதம் குறைப்பது என்றும், வரும் நாட்களிலும் இதே நிலை நீடித்தால், வரும், ஜன. 15க்கு பின் முற்றிலும் உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், அவிநாசி, தெக்கலுார், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை