தாராபுரம் ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
திருப்பூர்; தாராபுரம் ரோட்டரி சங்கத்தின், 2025 - 26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ரோட்டரி மஹாலில் நடைபெற்றது.ரோட்டரி முன்னாள் தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் சரவண குமார், ஆண்டறிக்கை வாசித்தார். புதிய தலைவராக பாலாஜி, செயலாளராக காளிமுத்து, பொருளாளர் சதீஷ்குமார் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். ரோட்டரியின் மதுரை மாவட்ட முன்னாள் கவர்னர் ராஜா கோவிந்தசாமி, சேலம் ரோட்டரி முன்னாள் கவர்னர்கள் அசோக்,சுந்தரராஜ் ஆகியோர், வாழ்த்தி பேசினர்.கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உதவி கவர்னர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.