உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை பணியாளர் பாலியல் குற்றச்சாட்டு

துாய்மை பணியாளர் பாலியல் குற்றச்சாட்டு

திருப்பூர்; மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த துாய்மை பணியாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதில், பெண் துாய்மைப்பணியாளர் ஒருவர் அளித்த மனு:மடத்துக்குளம் பேரூராட்சியில் 12 ஆண்டு களாக, வீடு வீடாக மக்கும், மக்காத குப்பை தரம்பிரித்து வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். பேரூராட்சியில், மேஸ்திரி ஒருவர் (பெயர் குறிப்பிட்டுள்ளார்) என்னிடம் ஒருமையிலும், இரட்டை அர்த்தங்களிலும் பேசுகிறார். பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். வேலையைவிட்டு நீக்கிவிடுவதாக மிரட்டுகிறார்.நான் வேலைக்கு செல்லும் இடத்துக்கு தொடர்ந்து வந்து, தகாத செயல்களில் ஈடுபடுகிறார். கவுன்சிலர் ஒருவர், பாலியல் ரீதியாக மன உளைச்சல் ஏற்படுத்திவருகிறார்.கணவனை இழந்து மகனுடன் வாழ்ந்துவரும் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எனக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
பிப் 19, 2025 08:58

திராவிட மாடல் ஆட்சியில் அங்கிங்கெணாத படி எங்கெங்கு காணினும் பாலியல் தொல்லை. பெண்கள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. மத்திய அரசு மொத்தத்தில் வேஸ்ட்.


முக்கிய வீடியோ