உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரத்தை அடியோடு வெட்டி ஆசிட் ஊற்றிய கொடூரம்

மரத்தை அடியோடு வெட்டி ஆசிட் ஊற்றிய கொடூரம்

அவிநாசி; சேவூரில் இருந்து முறியாண்டம்பாளையம் செல்லும் வழியில், அரசு மருத்துவமனை அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு நடப்பட்ட புங்கன் மரம் அங்கு வளர்ந்து தழைத்திருந்தது. நேற்று காலை அந்த மரத்தை அடி வேருடன் வெட்டி வீழ்த்திய மர்ம நபர்கள் மீண்டும் தழைக்காமல் இருக்க ஆசிட் ஊற்றி சென்றுள்ளனர். மரத்தை தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வளர்த்து வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கூறும்போது, ''அரசு புறம்போக்கு நிலத்தில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் இந்த மரம் நடப்பட்டது. முறியாண்டம்பாளையம் வி.ஏ.ஓ.,விடம் புகார் அளித்துள்ளேன். மரம் வெட்டியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை