தேர்த்திருவிழா; களைகட்டிய உடுமலை
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சிறப்பு அம்சமாக, திருவிழா நடக்கும் நாட்களில், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் என களைகட்டும்.அதே போல், தேர்த்திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், குட்டை திடலில், பிரமாண்ட ராட்டினங்கள், பொழுது போக்கு அம்சங்கள், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரையிலான விளையாட்டு அம்சங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான திருவிழா கடைகள் என, உடுமலை நகரமே களை கட்டும் விழாவாகவும், அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விழாவாக, இந்த தேர்த்திருவிழா உள்ளது.