மேலும் செய்திகள்
சித்தலுார் கோவிலில் சிறப்பு பூஜை
16-Jan-2025
பல்லடம்; பல்லடம் அடுத்த காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் கிராமத்தில் வசிக்கும் முழுக்காத குலத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளின் காதணி விழாவை நுாதன முறையில் கொண்டாடி வருகின்றனர்.கிராம மக்கள் கூறியதாவது:குழந்தைகளின் காதணி விழாவுக்கு முன்பாக, இங்குள்ள மூடி அம்மனை வழிபடுவது வழக்கம். பல நுாறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. முன்னதாக, காதணி விழா செய்பவர்கள், குழிக்குள் உள்ள அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தேங்காய், பழம், பூ மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் படையல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவர். இந்த சடங்கு செய்வதால், சீர் விழா நல்லபடியாக நடக்கும் என்பது ஐதீகம்.தொடர்ந்து, சீர் செய்பவர்கள், நவதானியங்களை குழிக்குள் இட்ட பின், அம்மனை வழிபட்டு விட்டு, குழியை மூடி விடுவர். அடுத்து வேறு யாரேனும் சீர் செய்யும் போதுதான் மீண்டும் மூடியை திறந்து அம்மனுக்கு வழிபாடு செய்வார்கள். அதுவரை, குழி மூடப்பட்டுதான் இருக்கும். அம்மன், குழிக்குள் வைத்து மூடப்படுவதால், இந்த அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர். கடந்த காலங்களில், ஏழு நாட்கள் வரை மூடி அம்மனுக்கு வழிபாடுகள் விமரிசையாக நடக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, மூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின், வழக்கம்போல் குழி மூடப்பட்டது. அனைவரும் பிரசாதம் சாப்பிட்டு வீட்டுக்கு திரும்பினர்.
16-Jan-2025