பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழிகளால் காத்திருக்கும் ஆபத்து
உடுமலை: உடுமலை நகராட்சி, தாராபுரம் ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் நகரிலுள்ள பிரதான ரோடுகளில், பாதாளச்சாக்கடை ஆளிறங்கும் குழிகள் ரோடு உயரத்திற்கும் மேலும், பல இடங்களில் மிகப்பெரிய பள்ளமாகவும் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில், ஆளிறங்கும் குழி உடைந்து,ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், இந்த ரோடுகளில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே, நகரிலுள்ள பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழிகளை புதுப்பிக்கவும், தரமாகவும் அமைக்க வேண்டும்.