உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலைகுலைந்த பூங்கா சீர்செய்யாத அவலம்

நிலைகுலைந்த பூங்கா சீர்செய்யாத அவலம்

பல்லடம்: பல்லடம் பகுதியில், கடந்த, 6ம் தேதி அன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் சூறைக்காற்றுக்கு, வீடு, கடைகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம், உப்பிலிபாளையம் பகுதியில், அம்மா பூங்கா உள்ளது. பூங்கா வளாகத்தில் இருந்த சில மரங்கள், சூறைக்காற்றுக்கு வேருடன் பெயர்ந்து விழுந்தன.இவ்வாறு விழுந்த மரங்கள், பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வழியிலும், சிறுவர்கள் விளையாடும் உபகரணங்களின் மீதும், இருக்கைகள் மீதும் விழுந்தன. சூறைக்காற்று பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும், பூங்கா வளாகத்தில் விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:மாலை நேரங்களில் ஏராளமான சிறுவர், சிறுமியர் பூங்காவில் விளையாடுகின்றனர். பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யவும் பூங்காவை பயன்படுத்துகிறோம். சூறைக்காற்றுக்கு மரங்கள் விழுந்து ஒரு வாரம் ஆகியும், சரிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், நடைப்பயிற்சி வழிதடத்தையும், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களையும் ஆக்கிரமித்துள்ளன. பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்கா வளாகத்தில் புதர் மண்டி கிடப்பதால், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி உலா வருகின்றன. விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி, புதர்களை அகற்றி, பூங்காவை பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ