மேலும் செய்திகள்
சாலையில் பனி மூட்டம்; குறையாத குளிரால் அவதி
23-Jan-2025
திருப்பூர்; தமிழ்நாடு வேளாண் பல்கலை., இந்திய வானிலைத்துறையின் கோவை காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.அதன்படி, வரும் 16ம் தேதி வரை திருப்பூரில், வறண்ட வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை, 32 டிகிரி செல்சியஸ் முதல், 33 டிகிரி செல்சியஸ் வரை (89 முதல், 91 டிகிரி பாரன்ஹீட் வரை), குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல், 21 டிகிரி செல்சியஸ் வரை (68 முதல், 69 பாரன்ஹீட் வரை) வெயில் நிலவும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.அனைத்து பயிர்களுக்கும், மண் ஈரத்தை பொறுத்து, நீர் பாசனம் செய்ய வேண்டும். வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அறுவடை செய்த தானியங்களை காய் வைத்து, தக்க முறையில் சேமிக்க வேண்டும்.தென்னை மரத்தில் தற்போதைய சூழலில், இலைகருகல் நோய் பரவ வாய்ப்புண்டு.எனவே, விவசாயிகள், மரத்தை நன்கு கண்காணிக்க வேண்டும்.
23-Jan-2025