உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பியூஸ் கட்டையை ஒப்படைத்த விவசாயி

பியூஸ் கட்டையை ஒப்படைத்த விவசாயி

திருப்பூர்: காங்கயம் மின்வாரிய கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.அதில் பங்கேற்ற உத்தமபாளையத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ், மின் இணைப்பு மாற்றிக்கொடுப்பது தொடர்பான பிரச்னைக்காக பல்லடம் செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தார். கடந்த, ஒரு ஆண்டாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனால், மனுதாரருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அவர் மின்வாரியம் கொடுத்த, மின் இணைப்பு 'பியூஸ்' கட்டையை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !