மேலும் செய்திகள்
ரயில் மோதி மூதாட்டி பலி
23-Oct-2025
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் அருகில் ஊத்துக்குளி ரோட்டில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து கட்டபொம்மன் நகர் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குத திறந்துவிடப்பட்டது. பாலம் நிறைவடையும் குத்துாஸ்புரம் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டோரம், மலை போல் குப்பை குவிந்து கிடந்தது. நேற்றிரவு, அந்த குப்பைக்கு சிலர் தீ வைக்க, அது, 'மளமள'வென பரவி, அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்த திருப்பூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ, பாலத்தை தாங்கியுள்ள துாணை சுற்றிலும் எரிந்தது. இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
23-Oct-2025