உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  முதல் படி தாண்டுவதற்கே தடுமாற்றம்

 முதல் படி தாண்டுவதற்கே தடுமாற்றம்

மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பிற உள்ளாட்சி அமைப்புகளும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பைகளுக்கான தடையை தீவிரமாக அமலாக்க தற்போது துவங்கியிருக்கின்றன. வீடு, ஓட்டல், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகளை தரம் பிரித்து அகற்றவும், வழிகாட்டுதல்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியிருக்கிறது. முதலில், 'மக்கும் குப்பை எது, மக்காத குப்பை எது? அதை எப்படி தரம் பிரிப்பது' என்ற புரிதல் மக்களுக்கு வரவேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் முதல் படியே இதுதான் என்ற நிலையில், இந்த படியை கூட தாண்டாத நிலைதான், மாநகரின் யதார்த்த நிலவரம். வீடு தோறும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை துவக்கியிருக்கிறது, திருப்பூர் துப்புரவாளன் அமைப்பு. அதன் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் கூறுகையில், ''திருப்பூர் மாநகராட்சியில், 20 வார்டுகளை தேர்வு செய்து, நுாறு சதவீதம் குப்பை தரம் பிரித்து வழங்கும் நிலையை உருவாக்கும் நோக்கில், மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஐ.டி.சி., நிறுவனத்தினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை துவக்கியுள்ளோம். தனியார் நிறுவனத்தினரின் உதவியுடன், 20 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் தினமும், 60 வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களது பணியை கண்காணித்து, பதிவு செய்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை