மேலும் செய்திகள்
கர்நாடக இசை, பரத நாட்டியம் அரங்கேற்றம்
04-Oct-2024
'எதனை விதைக் கிறோமோ அதை அறுவடை செய்வோம்' என்பது சான்றோர் வாக்கு.'அதுவும், கருவில் வளரும் குழந்தைக்கு இசையை விதைப்பதன் வாயிலாக அக்குழந்தையின் எதிர்காலத்தை நாம் நினைத்தவண்ணம் அறுவடை செய்ய முடியும்' என தீர்க்கமாக சொல்கிறார், பல்லடத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் சுப்புலட்சுமி.கர்நாடக இசையில் டாக்டர் பட்டம் பெற்று, இசை மருத்துவம் பயின்றுள்ள அவர், நம்மிடம் பகிர்ந்தது:நானும் என் கணவர் சுபாஷூம், கர்நாடக இசை பயின்றுள்ளோம். தனது, 3 வயதில் திருஞானசம்மந்தர் பாடல் பாடினார் என, புத்தகத்தில் படிக்கும் போது, எனக்குள் ஒரு ஈர்ப்பு வந்தது. என் மகன் கருவில் வளரும் போதே, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை கேட்டும், பாடியும் வந்தேன்; தினமும், 2 மணி நேரம் தம்பூரா இசை கேட்பேன்.அதன் விளைவாக, கருவில் வளர்ந்த என் குழந்தை இசை ஞானத்துடன் பிறந்தான். தனது, 3 வயதிலேயே பாடல்களை பாடும் ஆற்றல் பெற்றான்; தொடர்ந்து, சென்னையில் தங்கி, இசை மேதைகளிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றான். தற்போது அவனுக்கு வயது, 20; தனியார் தொலைக்காட்சியில் நடந்த பாட்டுப் போட்டியில், சாம்பியன் பட்டம் பெற்றான். அரசு மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில், பல விருதுகளை பெற்றுள்ளார்' என, தன் மகன் மகிழனின் இசை பயணத்துக்கு முகவுரை கொடுத்தார், சுப்புலட்சுமி.தொடர்ந்து அவர் கூறுகையில், ''3 மாத கர்ப்பிணிகளுக்கு இசை மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறேன். ஒவ்வொரு வரின் மனநிலை, குடும்ப சூழலுக்கு ஏற்ப அவர்கள் எதுமாதிரியான இசையை கேட்க வேண்டும் என பயிற்சி வழங்கி வருகிறேன். அதன் மூலம் கருவில் வளரும் குழந்தை எப்படி உருவாக வேண்டும் என நினைக்கிறோமோ அதுமாதிரி மாற்ற முடியும்'' என்றார் சுப்புலட்சுமி.மகிழன் கூறுகையில், ''என் இசை பயிற்சி தடைபடும் என்பதால், 8ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்றேன். அதன்பின், திறந்தநிலை பள்ளியில், 12ம் வகுப்பு முடித்து, பின் கல்லுாரி படிப்பு முடித்தேன். தினமும், 8 மணி நேரம் இசை பயிற்சி செய்தேன். கடின உழைப்பு தான், இசை உலகில் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சினிமா பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்ற நிலையில் சாதிக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம்,'' என்றார்.
04-Oct-2024