உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட் சமாரிட்டன் சட்டம்; மாணவருக்கு விழிப்புணர்வு

குட் சமாரிட்டன் சட்டம்; மாணவருக்கு விழிப்புணர்வு

திருப்பூர் : விபத்து அல்லது அசம்பாவிதங்களில் உதவும் நபர்களை போலீஸ் விசாரணையில் இணைக்கக்கூடாது. தக்க நேரத்தில் உதவும் அவர்கள் 'குட் சமாரிட்டனாக' கருதப்படுவர். அவர்களுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களது அடையாளத்தை போலீஸ் மற்றும் மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பன உள்ளிட்டவை வரையறுக்கப்பட்டது.இச்சட்டத்தின் சாராம்சம் குறித்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக்குழு (யு.சி.ஜி.,) உத்தரவிட்டுள்ளது. அரசு கலைக் கல்லுாரி முதல்வர்கள் கூறுகையில், ''சிறப்பான, ஒழுக்கமான செயல்களை செய்பவராக மாணவர் மாறும் போது, இளம் தலைமுறை நல்வழியில் பயணிக்கும். இதை, மத்திய மனித வள அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் 'குட் சமாரிட்டனாக' மாற வழிகாட்டுவதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, யு.சி.ஜி., தரப்பில் இருந்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது; அதைப் பின்பற்றி தக்க ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ