ரயில்வே மேம்பாலத்தில் ஓட்டை; விபத்து அபாயம்
உடுமலை; உடுமலை ரயில்வே மேம்பாலத்தில் 'ஓட்டை' விழுந்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.உடுமலையிலிருந்து, மூணாறு, அமராவதி, திருமூர்த்திமலை செல்லும் பிரதான வழித்தடத்தில், தளி ரோட்டில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் ஓடு தளத்தின் ஒரு பகுதியில், பெரிய அளவிலான ஓட்டை விழுந்துள்ளது.போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், இதில், வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது . இதனை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.