உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மெய்ப்பொருள் கண்டறிவதே உன்னத நிலை!  குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு

மெய்ப்பொருள் கண்டறிவதே உன்னத நிலை!  குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு

உடுமலை;''நம்முள் இருக்கும் தெய்வீக உணர்வை வெளிப்படுத்த, கல்வியும், ஆசிரியர்களும் உறுதுணையாக உள்ளனர்,'' என குருமகான் பரஞ்ஜோதியார், பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழாவில் பேசினார்.உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 35வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நேற்று நடந்தது.உலக சமாதான அறக்கட்டளை பொதுச்செயலர் சுந்தரராமன், விழாக்குழு தலைவர் விஸ்வநாதன் வரவேற்றனர். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை., துணைவேந்தர் கலா தலைமை வகித்தார்.மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன், புதுச்சேரி தனியார் கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் அரவிந்தன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், குருமகான் பரஞ்ஜோதியார் பேசியதாவது: பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைவரும் தெய்வீக பண்புடையவர்களே ஆவர். பின்னர் பல்வேறு சூழல்களின் காரணமாக அவர்களது பண்புகள் மாறுகிறது; பகைமை உணர்வு ஏற்படுகிறது.நமது வாழ்வின் நோக்கமே நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே ஆகும். அனைவரிடமும் உள்ளுணர்வாக இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்த, கல்வியும், ஆசிரியர்களும் வழிகாட்டுகின்றனர்.எனவே தான் நமது பண்பாட்டில், ஆசிரியர்கள் எனப்படும் குருக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்; அவர்களை போற்றி பாதுகாத்தனர். விஞ்ஞானம் என்பது புலன் வழியே சென்று தேடுவது; மெய்ஞானம் என்பது அகவழியே சென்று தேடுவதாகும். பெரும்பாலானவர்கள் புறப்பொருளை மட்டுமே அறிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்; சிலர் மெய்ப்பொருளை கண்டறிந்து உன்னத நிலையை அடைகின்றனர்.மெய்ப்பொருளை கண்டறிவதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, பேசினார்.தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை