நுாலகத்துக்கு தேவை புது கட்டடம்
தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையம் பேரூராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், கிளை நுாலகம் உள்ளது.கடந்த, 1993ல் கட்டிய நுாலக கட்டடம் மிகவும் பழுதாகியுள்ளது. மழைநீர் தேங்கியும், சுவற்றில் வடிந்தும் கட்டடம் சேதமாகி வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், நுாலகத்துக்கு புதிய கட்டடம் அமைத்து கொடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.