உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசம் தானே நம்மை வாழ வைக்குது!

தேசம் தானே நம்மை வாழ வைக்குது!

திருப்பூர்; திருப்பூரில் நேற்று பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர், கொங்கணகிரியில் கந்த பெருமான் கோவிலில் சுதந்திரதின விழா நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, தேசிய கொடியேற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார். அறங்காவலர்கள் ராஜாமணி, துரைசாமி, செயல் அலுவலர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர். குமரன் கல்லுாரி திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். கூட்டுறவு சார் பதிவாளர் கார்த்திகை செல்வி, தேசிய கொடியேற்றினார். உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரி, குமரன் கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல் ராஜ், கூட்டுறவு கட்டட சங்க செயலாளர் செல்வி வெங்கடாச்சலம் (திருப்பூர்), ராமசுப்ரமணியம்(தாராபுரம்), வெங்கடேஷ்குமார், (ஈரோடு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றை, மாணவிகள் வாசித்தனர். பின், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. l திருப்பூர் மாநகராட்சி, திருநீலகண்டபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம், முன்னாள் மாணவர் சங்கத்தின் கனகராஜ், நடராஜ் மற்றும் ஆசிரியர், பெற்றோர் பங்கேற்றனர். l திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சிறந்த நுகர்வோர் செயல்பாட்டாளர் நற்சான்றிதழ், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் சிந்து சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். l திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு அலுவலகத்தில், அதன் தலைவர் சிந்து சுப்ரமணியம், கொடியேற்றினார். செயலாளர் வெங்கடாஜலபதி, பொருளாளர் ஈஸ்வரன், துணை செயலர் குமார் உட்பட பலரும் பங்கேற்றனர். l திருப்பூர், கருப்பகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியை லட்சுமி பிரபா, பேசினார். ஆசிரியைகள் தீபாமாலினி, தவப்பிரியா, திவ்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். l திருப்பூர் மாவட்ட எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் முத்துசாமி, தலைமை வகித்தார். சிறுபூலுவப்பட்டி மாவட்ட அலுவலகம், பெருமாநல்லுார், சேவூர், தங்கமேடு, பல்லடத்தில் கொடியேற்றப்பட்டது. நிர்வாகிகள் கலைச்செல்வன், முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காங்கயம் கோர்ட் காங்கயம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நேற்று சுதந்திர தினம் முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி கொடியேற்றினார். முன்சீப் நீதிபதி மாலதி, மாஜிஸ்திரேட் தேன்மொழி முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழுதுகள் வள மையம் திருமுருகன்பூண்டி அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள விழுதுகள் வள மையம் சார்பில், நேற்று சுதந்திர தின விழா நடந்தது. திட்ட மேலாளர் கோவிந்தராஜ் கொடியேற்றினார். மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. குடியிருப்போர் சங்கம் திருமுருகன் பூண்டி, எம்.ஜி.ஆர்., நகர் வி.எஸ்.பி., நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. தேசியக் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது. பொல்லிக்காளிபாளையம் பொங்கலுார் - பொல்லிக்காளிபாளையம் அரசு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமையில் நடந்தது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர் கலை நிகழ்ச்சி நடந்தது. பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரேவதி கனகராஜ், பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 'அகரம்' மக்கள் நல சங்கம் அவிநாசி, சீனிவாசபுரம் பகுதியில் உள்ள அப்துல் கலாம் பூங்காவில் அகரம் மக்கள் நல சங்கம் சார்பாக சுதந்திர தின விழா மற்றும் சங்கத்தின் 16வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. கவுரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், கவுரவ தலைவர் சீனிவாசன், தலைவர் தேவ சுந்தரம், செயலாளர் சந்திரமோகன், பொருளாளர் தங்கமணி குளம் காக்கும் அமைப்பு தலைவர் துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவிநாசி போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் முருகன் பங்கேற்று குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி பொருட்கள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார். நகராட்சி பள்ளி திருமுருகன்பூண்டி நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் குமார் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விளையாட்டு சீருடை போத்தம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடையை மக்கள் சேவகன் அறக்கட்டளை மற்றும் சேவூர் ரோட்டரி கிளப் ஆகியோர் இணைந்து வழங்கினர். பள்ளி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பூண்டி நகராட்சி திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், காந்தி சிலைக்கு நகராட்சித் தலைவர் குமார் மாலை அணிவித்து, தேசிய கொடியேற்றினார். நகராட்சி துணைத் தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வி அறக்கட்டளை செவந்தாம்பாளையம் பகுதியில், நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, ஸ்ரீசெல்வ விநாயகர் கல்வி அறக்கட்டளை சார்பில், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில், நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் லோகநாதன், தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். கலை நிகழ்ச்சி நடந்தது. கொடுவாய் பள்ளி கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் முரளீதரன் வரவேற்றார். பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த தலா மூன்று மாணவன், மூன்று மாணவியருக்கு, 86 ஆயிரம் ரூபாயை கொடுவாயைச் சேர்ந்த ஆறுமுகம் கிருஷ்ணவேணி தம்பதியினர் வழங்கினர். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஜெயபாண்டியன், ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். த.வெ.க., த.வெ.க., மேற்கு மாவட்டம் சார்பில், திருப்பூர் குமரன் மற்றும் வீரபாண்டியில் உள்ள தியாகி சுந்தராம்பாள் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி பள்ளிகள் திருப்பூர் மாநகராட்சி, பாரப்பாளையம் நடுநிலைப்பள்ளி, செல்லம் நகர் துவக்கப்பள்ளி, கே.வி.ஆர்., நகர் துவக்கப்பள்ளி, கே.வி.ஆர்., நகர் உயர்நிலைப்பள்ளிகளில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கே.செட்டிபாளையம் பள்ளி கே.செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், கவுன்சிலர் காந்திமதி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகர போலீஸ் நல்லுார் சரக உதவி கமிஷனர் தையல்நாயகி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். 'அப்துல்கலாம்' என பெயரிடப்பட்ட தாவரவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. கடந்தாண்டு முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. வணிகர் சங்க பேரவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடந்த விழாவுக்கு வடக்கு மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். அப்பியாபாளையம் நடுநிலைப்பள்ளியில், தேசிய கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர், பெருமாநல்லுார் கிளை தலைவர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி சங்கம் விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில், பல்லடம் சங்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ