சாதித்த அரசு பள்ளிகள் எண்ணிக்கை உயர்ந்தது !
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெற்று தந்த அரசு பள்ளிகள் எண்ணிக்கை, 36ல் இருந்து, 38 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், கடந்தாண்டு, சென்டம் ரிசல்ட் கொடுத்த, 17 பள்ளிகள் நடப்பாண்டு சென்டம் கொடுத்த தவறியுள்ளன. கடந்தாண்டு நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெறாமல், நடப்பாண்டு, 11 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை தந்துள்ளது.கடந்தாண்டும் நடப்பாண்டும்மூலனுார் மாதிரி பள்ளி, பாப்பான்குளம், புக்குளம், ஏ.அம்மாபட்டி, திருமூர்த்தி நகர், எஸ்.முருகப்பா அரசு உயர்நிலைப்பள்ளி, சூரியப்பம்பாளையம், அண்ணாநகர் - திருப்பூர், கீரனுார், தம்மரெட்டிபாளையம், நெய்க்காரம்பாளையம், ஆச்சியூர், மனக்கடவு, தேர்பட்டி, நஞ்சைத்தலையூர், எலுகாம்வலசு, சேசையன்பாளையம், ஓலப்பாளையம், கெத்தல்ரேவ், என்.சின்னியகவுண்டன் வலசு, சங்கரெண்டாம்பாளையம் ஆகிய, 21 பள்ளிகள், 2024லும் நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெற்று, மீண்டும் நடப்பாண்டு சாதித்து, பாராட்டு பெற்றுள்ளன.தவற விட்ட பள்ளிகள்கடந்தாண்டு நுாற்றுக்கு நுாறு சதவீதம் பெற்றுத்தந்த பெல்லம்பட்டி, புதுப்பை, பொட்டிக்கம்பாளையம், தாசர்பட்டி, தாராபுரம் பொன்னு மகளிர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோடங்கிபாளையம், வி.கள்ளிப்பாளையம், காளிநாதம்பாளையம், பெரியஇல்லியம், பஞ்சலிங்கம்பாளையம், திருமலைகவுண்டம்பாளையம், மடத்துக்குளம், பூலாங்கிணறு, ராஜேந்திரா ரோடு, உடுமலை, அமராவதி நகர் ஆகிய, 17 அரசு பள்ளிகள் நடப்பாண்டு சென்டம் கோட்டை விட்டுள்ளன.அதே நேரம், தளவாய்ப்பட்டணம், உத்தமபாளையம், பெரமியம், நல்லிமடம், செலாம்பாளையம், நடுவேலம்பாளையம், வலையபாளையம், காமநாயக்கன்பாளையம், கானுார்புதுார், போத்தம்பாளையம், செங்கப்பள்ளி, உடுமை தேவனுார் புதுார், சர்க்கார் கண்ணாடிப்புத்துார் ஆகிய, 11 பள்ளிகள் கடந்தாண்டு சென்டம் பெறாமல், நடப்பாண்டு பெற்றுத்தந்துள்ளது.
எண்ணிக்கை உயர்வு
கடந்தாண்டு, திருப்பூர், 21வது இடம் பெற்றது. ஒரு ஆதிதிராவிட நலப்பள்ளி, இரண்டு உதவி பெறும் பள்ளி, 36 அரசு பள்ளி, 114 மெட்ரிக் பள்ளி என மொத்தம், 154 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெற்று அசத்தின. நடப்பாண்டு, நான்கு இடங்கள் முன்னேறி, 17 வது இடம் பெற்றது. ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, ஐந்து அரசு உதவி பெறும் பள்ளி, 38 அரசு பள்ளிகள், 118 மெட்ரிக் பள்ளி என மொத்தம், 162 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி தந்துள்ளது. முந்தைய ஆண்டை விட கூடுதலாக எட்டு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.