உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இருளில் மூழ்கும் மேம்பாலம் உயர்மின்விளக்கு எரிவதில்லை

இருளில் மூழ்கும் மேம்பாலம் உயர்மின்விளக்கு எரிவதில்லை

உடுமலை,; உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தில், உயர்மின் விளக்குகள் எரியாததால், இரவில் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.உடுமலை, தளி ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, காந்திசவுக் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.உடுமலை வழித்தடத்தில், திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மூணார் செல்லும் அனைத்து வாகனங்கள், பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி செல்கின்றன.நாள்தோறும், ஆயிரக்கணக்கில் வாகனங்கள் கடந்து செல்லும் பாலத்தில், உயர்மின் விளக்குகள் சீராக எரிவதில்லை. பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதி விளக்குகள் மட்டுமே வெளிச்சமளிக்கின்றன.இதனால், இரவில் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்து ஏற்படும் ஆபத்தான சூழலில் செல்ல வேண்டியுள்ளது.மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, மின்விளக்குகளை சீரமைக்க, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி