உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்தது!

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்தது!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவில், 21வது இடத்தில் இருந்து, 17வது இடத்தைப் பெறுவதற்கு அரசு, மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்ததும் ஒரு காரணமாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள, 148 அரசு பள்ளிகள், 88.02 சதவீத தேர்ச்சியை, 2024ல் வழங்கின. நடப்பாண்டு, 3.69 சதவீத தேர்ச்சியை உயர்ந்து, 91.71 சதவீத தேர்ச்சியை தந்துள்ளது. 13 மாநகராட்சி பள்ளிகள் கடந்தாண்டு, 87.19 சதவீத தேர்ச்சியை தந்தன; நடப்பாண்டு, 3.51 சதவீதம் உயர்ந்து, 90.70 சதவீத தேர்ச்சியை தந்துள்ளன.ஆதிதிராவிடர் நலப்பள்ளி தேர்ச்சி சதவீதம், 73.08ல் இருந்து, 92.68 ஆக உயர்ந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி, 91.77ல் இருந்து, 94.95 ஆக உயர்ந்துள்ளது. மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி, 99.09ல் இருந்து, 99.32 சதவீதம் உயர்ந்துள்ளது.

அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் உயர்வு

கடந்த, 2024ல், மாவட்டத்தில், 148 அரசு பள்ளிகளில், 6,675 மாணவர்கள், 6,140 மாணவியர் என, 12 ஆயிரத்து, 815 பேர் தேர்வெழுதினர்; இவர்களில், 5,658 மாணவர், 5,622 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 1,017 பேரும், மாணவியரில், 518 பேரும் தேர்ச்சி பெறவில்லை. மாணவர் தேர்ச்சி சதவீதம், 84.76; மாணவியர் தேர்ச்சி சதவீதம், 91.56. நடப்பாண்டு, 148 அரசு பள்ளிகளில், 6,439 மாணவர், 6,111 மாணவியர் என, 12 ஆயிரத்து, 550 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 5,782 மாணவர், 5,728 மாணவியர் என, 11 ஆயிரத்து, 510 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 657 பேரும், மாணவியரில், 329 பேரும் தேர்ச்சி பெறவில்லை.முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாணவர் தேர்ச்சி சதவீதம், 5.04 சதவீதமும், மாணவியர் தேர்ச்சி சதவீதம், 2.17 சதவீதமும் உயர்ந்து முறையே, 89.80 மற்றும் 93.73 சதவீதமாகியுள்ளது. அரசு பள்ளிகள் மொத்த தேர்ச்சி சதவீதம், 3.69 சதவீதம் உயர்ந்து, 88.02ல் இருந்து, 91.71 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாநகராட்சி பள்ளிகளும் அசத்தல்

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 13 பள்ளிகள் செயல்படுகின்றன. கடந்தாண்டு, 988 மாணவர், 1,908 மாணவியர் என, 2,896 பேர் தேர்வெழுதினர். 808 மாணவியர், 1,717 மாணவியர் என, 2,525 பேர் தேர்ச்சி பெற்றனர்; மாணவர் தேர்ச்சி சதவீதம், 81.78; மாணவியர், 89.99. நடப்பாண்டு, 949 மாணவர், 1,761 மாணவியர் என, 2,710 பேர் தேர்வெழுதினர். 808 மாணவர், 1,650 மாணவியர் என, 2,458 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தேர்ச்சி சதவீதம், 3.36 சதவீதம் உயர்ந்து, 85.14. மாணவியர் தேர்ச்சி சதவீதம், 3.71 சதவீதம் உயர்ந்து, 93.70 சதவீதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ