உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழியை மூடவில்லை; குடிநீரும் இல்லை

குழியை மூடவில்லை; குடிநீரும் இல்லை

பல்லடம்,: பல்லடம், மங்கலம் ரோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஏ.பி., நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு, கழிவுநீர் கொண்டு செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணி சில தினங்கள் முன் துவங்கியது.கால்வாய், உரிய திட்டமிடல் இன்றி கட்டப்பட்டு வருவதாகவும், கழிவுநீர் தேங்கும் அபாயம் உள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர். ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள், கால்வாய் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.குடியிருப்பினர் கூறுகையில், 'கால்வாய் கட்டுமான பணிக்காக, குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகின்றன.இதற்காக, குடிநீர் குழாய்களின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. குழியை மூடிவிட்டு, குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை