பச்சை மிளகாய் விலை கிலோ ரூ. 30 ஆக சரிவு
திருப்பூர்; திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கு கடந்த சில நாட்களாக பச்சை மிளகாய் விற்பனைக்கு குவிகிறது. 1.50 டன் வரை விற்பனைக்கு வருவதால், மூன்று கிலோ, 100 ரூபாய்; ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவரை, பீர்க்கன், பாகற்காய், பவானி கத்தரி, வெண்டை, உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிலோ 40 - 50 ரூபாய் என விற்கிறது. சின்ன வெங்காயம், 60. பெரிய வெங்காயம், 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது.பனியின் தாக்கம், அதிகளவில் இலை உதிர்வதுடன், நிறம் மாறி விடுவதால், கறிவேப்பிலை வரத்து குறைந்துள்ளது. இதனால், கிலோ, 50 ரூபாய்க்கும், கட்டு, 20 ரூபாய்க்கும் கறிவேப்பிலை விற்றது. கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பதால், மூன்று கட்டு, 20 ரூபாய். கிலோ, 30 ரூபாய்க்கு கொத்தமல்லி இலை விற்கிறது.மலை காய்கறி மட்டும் விலை உயர்ந்துள்ளது; கேரட், 60, பீன்ஸ், 65, ஊட்டி பீட்ரூட், 50 ரூபாய். சீசன் இல்லாத நிலையில், வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், எலுமிச்சை தொடர்ந்து விலை குறைந்து கிலோ, 50 ரூபாய்க்கு வந்து விட்டது. முருங்கை வரத்து தற்போது தான் மெல்ல துவங்கியுள்ளது.