ரோடு படுமோசம் வாகனம் தடுமாற்றம்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு எஸ்.வி., காலனி பரபரப்பான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. ஏராளமான குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளன.எஸ்.வி., காலனி பிரதான ரோட்டிலிருந்து பல்வேறு குறுக்கு ரோடுகள் பிரிந்து செல்கின்றன. இதில், திருநீலகண்டபுரம் செல்லும் ரோடு ஒரு முக்கியமான ரோடாக உள்ளது.குழாய் பதிப்பு பணிக்கு குழி தோண்டும் பணி நடந்தது. அதன் பின், குழாய் பதிப்பு பணிகள் முடிந்ததும் தோண்டிய குழியை மண் போட்டு மூடி விட்டனர்.இந்த ரோடு தற்போது ஜல்லி கற்கள் மற்றும் குண்டும் குழியுமாக மண் ரோடாக மாறி விட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.வாகன ஓட்டிகள் தடுமாறி சிறு விபத்துகள் ஏற்படுவதும், வாகனங்கள் பழுதடைவதும் தொடர்ந்து நடக்கிறது.தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ரோட்டை முழுமையாக சீரமைத்து புதிய ரோடு அமைக்க வேண்டும்.