மேலும் செய்திகள்
கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
31-Dec-2024
உடுமலை, ;மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம் புதர் மண்டி காணப்படுவதால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், ஒழுங்கு முறை விற்பனை கூடம், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் உள்ளிட்டை அமைந்துள்ளன.தினமும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்லும் நிலையில், வளாகத்தில் கிடங்குகள், அலுவலகங்கள் உள்ள பகுதிகள் பராமரிக்கப்படாமல், செடிகள், கொடிகள், முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இப்பகுதிகளில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகளவு உள்ளதால், ஆபத்தான நிலை உள்ளது.எனவே, ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் துறை அலுவலகங்கள் உள்ள பகுதியில், முட் புதர்களை அகற்றி, பராமரிக்கவும், மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31-Dec-2024