உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆலயா அகாடமி மாணவர்கள் அபாரம்

ஆலயா அகாடமி மாணவர்கள் அபாரம்

திருப்பூர்; திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையம் நால் ரோட்டில் செயல்படும், ஆலயா அகாடமி மாண்டிசோரி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் முதல் குழுவினர், 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொது தேர்வெழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றதால், பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: நாங்கள் குழந்தைகளை முன்னெடுத்து செல்கிறோம். குழந்தை, உலகை முன்னோக்கி எடுத்து செல்கிறது. கல்வியுடன் கூடிய விளையாட்டு, இணைப்பாட செயல்கள், மதிப்பீட்டு கல்வி, திருமுறை போன்றவற்றின் வாயிலாக, மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் வளர்கின்றனர். அனுபவமிக்க ஆசிரியர்களால் கல்வி போதிக்கப்படுகிறது. தினசரி பெற்றோருடனான தொடர்பு, பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் துாய்மையான சுற்றுச்சூழல் ஆகியவை பெற்றோரின் நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது. திறமை, ஒழுக்கத்துடன் கூடிய நல்ல குடிமகனை உருவாக்குவதே எங்களின் நோக்கம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ