ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளி மாணவ, மாணவியர் அபாரம்
திருப்பூர்; திருப்பூர் சகோதயாசி.பி.எஸ்.இ., கூட்டமைப்பு பள்ளிகளுக்கிடையே நடந்த கூடைப்பந்து போட்டியில், அவிநாசி தேவராயம்பாளையத்தில் உள்ள ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடமும், 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மூன்றாமிடமும் பெற்றனர். கோவை சகோதயா சி.பி.எஸ்.இ., கூட்டமைப்பு பள்ளிகளுக்கிடையே நடந்த கூடைப்பந்து போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இரண்டாமிடம் பெற்று இப்பள்ளி மாணவிகள் கோப்பை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் அகஸ்யா விக்ரம் பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.