உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உகந்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

உகந்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

திருப்பூர்; திருப்பூர் மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், சிவாலயங்கள் தோறும், திருவாசக முற்றோதல் நடந்து வருகிறது. அதன்படி, கோவில்வழி சவுந்தரவல்லி சமேத உகந்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் முற்றோதல் நடந்தது. சிவனடியார்கள் சிறப்பு வழிபாடு செய்து, திருவாசகம் முற்றோதலை துவக்கினர். பொன்னுாசல் பதிகம் பாடும் போது, துணியில் திருவாசக புத்தகத்தை வைத்து தாலாட்டி, அம்மையருக்கு பொன்னுாசல் பாடி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி