மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்தில் ஜன.13ல் ஆருத்ரா தரிசனம்
05-Jan-2025
இளையாத்தங்குடியில் தேரோட்டம்
10-Jan-2025
திருப்பூர்: திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி முதல், தினமும் மாலை, 6:30 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை பதிகங்களை, ஓதுவார் மூர்த்திகள் பாடினர். சிவாச்சாரியார்கள் நடராஜர் மற்றும் சிவகாமியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து, திருவெம்பாவை பதிகங்களை பாடி விண்ணப்பித்தனர். நேற்றுடன், மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் நிறைவு பெற்றது.இன்று மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், நாளை அதிகாலை, 3:00 மணிக்கு, நடராஜர் - சிவகாமியம்மனுக்கு மஹா அபிேஷகமும், காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.ஸ்ரீசிவகாமியம்மன் மற்றும் நடராஜ பெருமான், தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, கோவில் முன்பாக உள்ள, பட்டிவிநாயகரை, 11 முறை வலம் வரும் நிகழ்ச்சி காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. தொடர்ந்து, திருவீதியுலா நடைபெறும்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும் செய்து வருகின்றனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், ஆருத்ரா தரிசனத்தன்று, பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
05-Jan-2025
10-Jan-2025