மேலும் செய்திகள்
ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
22-Oct-2025
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த காளிமுத்து, 18. இவரது நண்பர்கள் ஹரி, 18, அபிநேஷ், 17, விஷ்வா, 18 என, நான்கு பேரும்டூவீலரில் தாராபுரத்துக்கு நேற்று வந்தனர். காட்டமன்புதுார் அருகே அமராவதி ஆற்றில், நான்கு பேரும் குளிக்க சென்றனர். அப்போது, காளிமுத்து ஆற்றில் மூழ்கினார். உடனே, மூன்று பேரும் அவரை மீட்டனர். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் காளிமுத்து இறந்தது தெரிந்தது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Oct-2025