ஓய்வு இன்ஸ்., வீட்டில் திருட்டு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, சந்தை ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 63. ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரான இவர், மனைவியுடன், ஆக., 19ல், ஹைதராபாத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு திரும்பி வந்த போது, கதவு உடைக்கப்பட்டு நான்கு வெள்ளி குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குங்கும சிமிழ், கொலுசு, கிண்ணம் என, 2 கிலோ கொண்ட வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.