உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

உடுமலை; உடுமலை அருகே பகலில், வீட்டின் கதவை உடைத்து, 18 பவுன் மற்றும் ரொக்கப்பணம் திருடப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உடுமலை அருகே எஸ்.வி., புரம் வன்னிநகரைச்சேர்ந்தவர் விஜயகுமார், 60; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரத்னா, நேற்று முன்தினம் பகலில், வீட்டை பூட்டி விட்டு, தனது அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார்.மாலை திரும்பி வந்த பார்த்த போது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற பார்த்த போது, மர்மநபர்கள் பீரோவை திறந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த, 18 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து விஜயகுமார் கொடுத்த புகார் அடிப்படையில், உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகலில், வீட்டுக்கதவை உடைத்து, நகை மற்றும் ரொக்கப்பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ