உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டில் நகை பணம் திருட்டு

வீட்டில் நகை பணம் திருட்டு

திருப்பூர் : திருப்பூர் முதலிபாளையம், ராயல் பார்க்கை சேர்ந்தவர் வசந்தா, 47. இவர் தனது குடும்பத்துடன் கடந்த 4ம் தேதி சொந்த ஊரான ராமநாதபுரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.பின், 8ம் தேதி இரவு வீடு திரும்பினர். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு, 2 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது தெரிந்தது. ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !