உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலத்தடி நீர் வறண்டு பாலைவனமாகும் அபாயம்

நிலத்தடி நீர் வறண்டு பாலைவனமாகும் அபாயம்

பொங்கலுார்; பொங்கலுார் பகுதியில் பெய்யும் மழைநீர் அல்லாளபுரம் குளத்தை நிரப்புகிறது. பின், திருப்பூரில் உள்ள ஓடையில் கலந்து நொய்யல் ஆற்றை அடைகிறது. திருப்பூரை ஒட்டியுள்ள கரைப்புதுார், அல்லாளபுரம், அக்கணம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அல்லாளபுரத்தில் அமைந்துள்ள குளம் பேருதவியாக உள்ளது. பி.ஏ.பி., வாய்க்காலில் மூன்றாம் மண்டல பாசனம் நடந்த பொழுது அப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீரை பாய்ச்சாமல் அல்லாளபுரம் குளத்தில் நிரப்பினர். இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். பி.ஏ.பி., ல் தண்ணீர் வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் ஆகும். அதுவரை இருக்கின்ற நிலத்தடி நீரே விவசாயத்திற்கு உயிர்நாடி. அதையும் விற்பனை செய்து விட்டால் குடிக்கக்கூட தண்ணீர் இருக்காது. அப்பகுதி பாலைவனம் போல் மாறி விவசாயமே அழிந்து போகும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ