உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியை சுற்றிலும் சுகாதாரம் இல்லை; மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்

பள்ளியை சுற்றிலும் சுகாதாரம் இல்லை; மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்

உடுமலை; உடுமலையில், அரசு பள்ளி அமைந்திருக்கும் ரோட்டோரம் முழுவதும் திறந்த வெளிக்கழிப்பிடமாகவும், சுகாதாரமில்லாத நிலையிலும் மாறி வருகிறது.உடுமலை ராஜேந்திரா ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உடுமலை வட்டார கல்வி அலுவலகம், கேந்திர வித்யாலயா பள்ளியும் செயல்படுகிறது. இரு பள்ளிகளிலும் சராசரியாக, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.தினசரி சந்தைக்கு அருகில் இப்பள்ளி அமைந்துள்ளது. சந்தை நாட்களில் பள்ளியின் முன்பாக சரக்கு வாகனங்களும், சந்தைக்கு வருவோரும் வாகனங்களை வரிசை கட்டி நிறுத்திச்செல்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளி விடும் நேரத்தில் வெளியில் செல்வதும் சிரமமாக உள்ளது.பள்ளி சுற்றுசுவரின் முன்பாகவே, பலரும் சிறுநீர் கழித்து செல்வதும், ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதும், தீ வைத்து எரிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் அப்பகுதியில் நுழைந்தவுடன், துர்நாற்றம் அதிக அளவில் வீசுகிறது.நாள்தோறும் அப்பகுதியில் உள்ள சுகாதார பிரச்னைகளை கடந்து தான், மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய வேண்டியுள்ளது. மேலும் பள்ளியின் நுழைவாயில் பாதையும் பாதுகாப்பில்லாமல் உடைந்த நிலையில் பல நாட்களாக உள்ளது.மாணவர்களின் மீதும், பள்ளியின் சூழல் குறித்தும் கல்வித்துறையும், நகராட்சி நிர்வாகமும் அக்கறை இல்லாமல் அலட்சியமாக உள்ளது.பள்ளியை சுற்றி சுகாதாரத்தை மேம்படுத்தவும், நுழைவாயில் பாதையை பாதுகாப்பானதாக மாற்றி அமைப்பதற்கும், அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை