இ-சேவை மையத்தில் இருக்கை வசதியில்லை
உடுமலை; தாலுகா அலுவலக இ-சேவை மையம், போதிய இருக்கை வசதியில்லாமல் உள்ளது.உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் அடையாள அட்டை மற்றும் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், இங்கு போதிய இருக்கை வசதியில்லை. பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் போதிய இடமில்லாமல் தவித்து வருகின்றனர். போதிய இருக்கை வசதி செய்ய, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.